செய்திகள்

குரோம்பேட்டை-பெருங்களத்தூரில் என்ஜினீயர்-வியாபாரி வீட்டில் கொள்ளை

Published On 2017-01-15 22:20 IST   |   Update On 2017-01-15 22:20:00 IST
குரோம்பேட்டை, பெருங்களத்தூரில் என்ஜினீயர் மற்றும் வியாபாரி வீட்டில் இருந்த நகை , பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
தாம்பரம்:

பெருங்களத்தூரை அடுத்த நெடுங்குன்றம் தேவராஜ் நகரில் வசித்து வருபவர் இம்தியாஸ். சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மயிலாடுதுறையில் உள்ள சொந்த ஊருக்கு சென்று இருந்தார்.

இன்று காலை அவரது வீட்டு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த 9 பவுன் நகை, ரூ. 5 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

குரோம்பேட்டையை அடுத்த சானட்டோரியம் ஜெயா நகரில் வசித்து வருபவர் வைத்தியநாதன். சேலையூரில் இருசக்கர உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவரது மனைவி ஆஷா. இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றார். திரும்பி வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த 12 பவுன் நகை, வைர நகை, ரூ. 10 ஆயிரம் ரொக்கம் கொள்ளைபோய் இருந்தது தெரியவந்தது.    

Similar News