செய்திகள்

பல்லாவரத்தில் அ.தி.மு.க. பிரமுகர் கொலை: போலீசார் விசாரணை

Published On 2017-01-13 16:19 IST   |   Update On 2017-01-13 16:19:00 IST
பல்லாவரத்தில் அ.தி.மு.க. பிரமுகர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக புழல் ஜெயிலில் இருக்கும் நெல்லை ரவுடியிடம் விசாரிக்க போலீஸ் முடிவு செய்துள்ளனர்.
தாம்பரம்:

பல்லாவரம், ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள ஒலிம்பியா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் அபுசாலி (வயது 34). பல்லாவரம் நகர அ.தி.முக. சிறுபான்மையினர் பிரிவு பொருளாளராக இருந்து வந்தார்.

இவர் பல்லாவரத்தை அடுத்த நாகல்கேணி, திருநீர்மலை சாலையில் இரும்பு கடை நடத்தி வந்தார்.

நேற்று மதியம் அபுசாலி கடையில் இருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம கும்பல் கடையில் இருந்த அபுசாலியை சரமாரியாக வெட்டி கொன்று தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

கடந்த மாதம் அபுசாலியின் உறவினரான கிண்டியை சேர்ந்த இரும்பு வியாபாரி முகமது அலி ரூ.2 கோடி கேட்டு கடத்தப்பட்டார். இந்த வழக்கில் நெல்லையை சேர்ந்த பிரபல தாதா ரபீக் உள்பட சிலரை போலீசார் கைது செய்தனர்.

இதே போல் மேலும் பல வியாபாரிகளை மிரட்டி ரவுடி ரபீக் பணம் பறித்து வந்ததாக தெரிகிறது. முகமது அலி கடத்தப்பட்டபோது அபுசாலிதான் போலீசில் புகார் செய்ய வைத்து ரபீக்கை கைது செய்ய வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த மோதலில் ரவுடி ரபீக் கூலிப்படையினரை ஏவி அபு சாலியை தீர்த்து கட்டியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

ஏற்கனவே கைதாகியுள்ள ரவுடி ரபீக் தற்போது புழல் சிறையில் உள்ளான். அவனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதன் பின்னரே கொலைக்கான காரணம் என்ன என்பது தெரிய வரும்.

கொலை நடந்த போது அபுசாலியின் கடையில் இருந்த கண்காணிப்பு காமிராவில் கொலையாளிகள் உருவம் பதிவாகியுள்ளது. அதனை வைத்து போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள். அபுசாலிக்கு வேறு யாருடனும் மோதல் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

Similar News