செய்திகள்

பல்லாவரத்தில் தனியார் பள்ளியில் மாணவி மரணம்

Published On 2017-01-11 14:39 IST   |   Update On 2017-01-11 14:39:00 IST
பல்லாவரத்தில் இன்று காலை தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு மாணவி மயக்கமடைந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம்:

பல்லாவரம் அப்துல் பரூக் தெருவில் வசித்து வருபவர் ஜான் மார்ட்டீன். இவரது மகள் ஆலீன் (9). அதே பகுதியில் தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றாள். வகுப்பறையில் இருந்த ஆலீன் மிகவும் சோர்வாக காணப்பட்டார். அவளிடம் மற்ற மாணவிகள் விசாரித்த போது எதுவும் கூறவில்லை.

இந்த நிலையில் வகுப்பு நடந்து கொண்டிருந்த போது திடீரென ஆலீன் மயங்கி விழுந்தார். அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் அவளை மீட்டு பம்மலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆலீன் பரிதாபமாக இறந்தார். இறந்து போன ஆலீனுக்கு இருதய நோய் இருந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து பல்லாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News