செய்திகள்

காஞ்சீபுரம் அருகே பைக்கில் இருந்து விழுந்து வாலிபர் பலி

Published On 2017-01-10 15:02 IST   |   Update On 2017-01-10 15:02:00 IST
காஞ்சீபுரம் அருகே பைக்கில் இருந்து விழுந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம், காமாட்சி அம்மன் சன்னதி தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (25). கிளீனர். இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வந்தவாசி சாலையில் சென்றார்.

கலெக்டர் அலுவலகம் அருகே வேதாச்சலம் நகரை கடந்த போது சாலையின் குறுக்கே மாடு வந்தது. அதன் மீது மோதாமல் இருக்க தமிழ்ச்செல்வன் மோட்டார் சைக்கிளை திருப்பினார்.

இதில் நிலைதடுமாறிய அவர் பைக்கில் இருந்து கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவருக்கு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி தமிழ்ச்செல்வன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து காஞ்சீபுரம் தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மற்றொரு சம்பவம்...

சென்னை வில்லிவாக்கம் வடக்கு ஜெகநாதன் தெருவை சேர்ந்தவர் வீரமணி (52). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று மாலை புழல் லட்சுமிபுரத்தில் உள்ள ஒருவரது வீட்டின் 2-வது மாடியில் நின்று கட்டிட பணி செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த வீரமணி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Similar News