செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பறிமுதல் - வாலிபரிடம் விசாரணை

Published On 2017-01-10 14:47 IST   |   Update On 2017-01-10 14:47:00 IST
சென்னை விமான நிலையத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலரை வாலிபரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை இலங்கை செல்லும் பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் செல்ல இருந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

சென்னையை சேர்ந்த கிருஷ்ணகுமாரின் கைப் பையை சோதனை செய்த போது கட்டு கட்டாக அமெரிக்க டாலர் இருந்தது. அதற்கான ஆவணம் அவரிடம் இல்லை. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

சுற்றுலா விசாவில் கிருஷ்ணகுமார் இலங்கை செல்ல இருந்தது தெரிய வந்தது. அவருக்கு அமெரிக்க டாலர் கிடைத்தது எப்படி? எங்கு கொண்டு செல்லப்படுகிறது. என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Similar News