செய்திகள்
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டரின் கார் கண்ணாடி உடைப்பு
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டரின் கார் கண்ணாடியை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருபவர் எழில்மாறன். இவர் தனது காரை ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்தி இருந்தார்.
நேற்று மாலை அவர் காரை ஆஸ்பத்திரியிலேயே நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
இன்று காலை அவர் ஆஸ்பத்திரிக்கு வந்தபோது அவர் கார் கண்ணாடி உடைந்து கிடந்தது. மர்ம நபர்கள் கார் கண்ணாடியை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து செங்கல்பட்டு டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.