செய்திகள்

மாமல்லபுரம் அருகே ஆட்டோ மீது வேன் மோதி விபத்து: 2 பேர் பலி

Published On 2017-01-10 12:02 IST   |   Update On 2017-01-10 12:02:00 IST
மாமல்லபுரம் அருகே ஆட்டோ மீது வேன் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்
மாமல்லபுரம்:

சென்னை அயோத்தி குப்பத்தை சேர்ந்தவர் டில்லிபாபு (வயது 25). ஆட்டோ டிரைவர்.

இவர் அதே பகுதியை சேர்ந்த உறவினர் துரைராஜு டன் (37) கல்பாக்கத்தை அடுத்த சதுரங்கபட்டினத்தில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆட்டோவில் சென்றார்.

பின்னர் அவர்கள் இருவரும் சென்னை நோக்கி ஆட்டோவில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். மாமல்லபுரத்தை அடுத்த கடம்பாடி கிழக்கு கடற்கரை சாலை பஸ் நிறுத்தம் அருகே வந்த போது எதிரே வந்த வேன் திடீரென ஆட்டோ மீது மோதியது.

இதில் ஆட்டோவின் முன் பகுதி நசுங்கியது. இடிபாடுகளில் சிக்கிய டில்லிபாபும், துரைராஜும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டுசெங்கல் பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி டில்லிபாபுவும், துரைராஜும் பரிதாபமாக இறந்தனர்.

Similar News