செய்திகள்
தி.மு.க. செயலாளர் சிவசங்கரை கண்டித்து ம.தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கர் செயலை கண்டித்து ம.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர்:

தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் பற்றி விசாரிக்கச் சென்ற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை பார்க்க விடாமல் தடுத்து கல்வீசிய தாக்கிய சம்பவம் நடைபெற்றது.
இது குறித்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் உட்பட முக்கிய தலைவர்கள் வருத்தம் தெரிவித்திருந்தனர். ஆனால் அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.எஸ்.சிவசங்கர் அந்த செயலை வரவேற்பதாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அவரது செயலை கண்டித்து அரியலூர் அண்ணாசிலை அருகே ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வக்கீல் கு.சின்னப்பா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் புகழேந்தி, மாவட்ட துணைசெயலாளர் செல்லப்பா, வாரணவாசி ராஜேந்திரன், கிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் தங்கவேல், பொதுக்குழு உறுப்பினர் ரவிக்குமார், பழனிவேல், நகரசெயலாளர் மனோகரன். மாவட்ட அணி பொறுப்பாளர் கஜேந்திரன், தமிழ்மாறன், சங்கர், அரியலூர் ஒன்றிய செயலாளர் ராமநாதன், காமராஜ், திருமானூர் ஒன்றிய செயலாளர் மாணிக்கவாசு, ராமகிருஷ்ணன், தா.பழுர் ஒன்றிய செயலாளர் எழிலரசன், கொளஞ்சியப்பன், ஜெயங் கொண்டம் ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.