செய்திகள்

ஓமலூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி

Published On 2016-11-15 18:00 IST   |   Update On 2016-11-15 18:00:00 IST
ஓமலூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காருவள்ளி கோம்பைகாடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (38). இவரது மனைவி வனிதா (35). இவர்களுக்கு இரண்டு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளனர்.

இதில் பெண் குழந்தை ரேணுகாதேவி(7) இரண்டாம் வகுப்பும், பிரதீப் (5) முதல் வகுப்பும், மதன் (3) எல்.கே.ஜி.யும் படித்து வருகின்றனர். சிவக்குமார் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வருகிறார்.

காருவள்ளி பகுதியில் நேற்று மாலை 6 மணிக்கு லேசான மழை பெய்தது. இதன் காரணமாக தனது அட்டை வீட்டிற்கு போடப்பட்டு உள்ள இரும்பு பைப்பில் மின்சார வயர் கம்பியை சுற்றி வைத்து உள்ளனர். இதன் காரணமாக மின்சார கசிவு ஏற்பட்டு உள்ளதை கவனிக்காத வனிதா அந்த கம்பியை பிடித்த போது அதில் இருந்த மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எலக்ட்ரீசியன் வீட்டில் அவரது மனைவி மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் காருவள்ளி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Similar News