செய்திகள்
கேரளாவுக்கு கடத்த முயன்ற 122 கிலோ கஞ்சா காருடன் பறிமுதல்
கூடலூரில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 122 கிலோ கஞ்சா காருடன் பறிமுதல் செய்யப்பட்டது.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகிறது. மேலும் சிலர் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து கேரளாவுக்கு கடத்தி விற்பனை செய்கின்றனர்.
இதனை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில் கடந்த சில தினங்களாக போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 2 தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட சோதனையில் 17 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கூடலூர் துர்க்கையம்மன் கோவில் அருகே உள்ள வாழைத்தோப்பில் கஞ்சா மூட்டைகளுடன் ஒரு கார் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உத்தமபாளையம் டி.எஸ்.பி அண்ணாமலை, கூடலூர் இன்ஸ்பெக்டர் ஜான்பெஞ்சமின் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர்.
அந்த காரில் 122 கிலோ கஞ்சா இருந்தது. அவற்றை காருடன் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் கூடலூர் காலனியை சேர்ந்த பஞ்சுராஜா(50) என்பவர்தான் அந்த கஞ்சா காரை வாழைத்தோப்பில் நிறுத்தி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா கடத்தல் கும்பலை சேர்ந்த மேலும் பலர் சிக்குவார்கள் என தெரிகிறது.