செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் மிதமான மழை

Published On 2016-11-03 16:20 IST   |   Update On 2016-11-03 16:20:00 IST
ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரு சில பகுதியில் லேசாக மழை பெய்ததால் அப்பகுதியில் குளிர்ச்சியான நிலை ஏற்பட்டது.

பவானி:

ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரு சில பகுதியில் மிதமான மழை பெய்தது. அரச்சலூர், பவானி, பவானிசாகர், கொடிவேரி அணை பகுதியில் நேற்று மாலை மற்றும் இரவில் விட்டுவிட்டு மழை பெய்தது. அதிகமாக பெய்யா விட்டாலும் லேசாக பெய்ததால் அப்பகுதியில் குளிர்ச்சியான நிலை ஏற்பட்டது.

இதேபோல் ஈரோடு மாவட்ட வனப்பகுதிகளான ஆசனூர், விளாங்கோம்பை, தாளவாடி, தல மலை பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

ஈரோட்டில் நேற்று மாலை லேசான மழை பெய்தது. 4 மி.மீட்டர் மழை மட்டும் ஈரோட்டில் பதிவானது. அதிகபட்சமாக அரச்சலூரில் 14 , பவானியில் 11.4, கொடிவேரி அணை பகுதியில் 9 மி.மீ மழை பதிவாகி இருந்தது.

பவானிசாகரில் 5.2, சென்னிமலையில் 4 மி.மீட்டர் மழையும் பதிவாகி இருந்தது.

ஈரோடு உள்பட மாவட்டம் முழுவதும் இன்றும் காலையில் இருந்தே வானம் மூடியபடி மேககூட்டமாக இருந்தது. ஒரு சில இடத்தில் சாரல் மழை பெய்து வருகிறது.

Similar News