ராசிபலன்

Today Rasipalan | இன்றைய ராசிபலன் 12.3.2026: இந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் கூடும்

Published On 2026-03-12 05:55 IST   |   Update On 2026-03-12 05:55:00 IST
  • இன்றைய ராசிபலன்
  • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

எதிர்கால சிந்தனை மேலோங்கும் நாள். ஆதாயம் வந்தாலும் விரயங்கள் இரு மடங்காகலாம். திடீர் பயணம் உண்டு. உத்தியோகத்தில் இடமாறுதல் ஏற்படலாம்.

ரிஷபம்

பொறுமையைக் கடைப்பிடித்து பெருமை காண வேண்டிய நாள். வரவைவிட செலவு கூடும். உத்தியோகத்தில மேலதிகாரிகளின் கண்டிப்பு மனக்கலக்கத்தை உருவாக்கும்.

மிதுனம்

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் விலகாமல் இருக்க பக்குவமாகப் பேசுவது நல்லது. உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு உண்டு.

கடகம்

ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். தொலைபேசி மூலம் தொழில் முன்னேற்றம் ஏற்படும். தொலைதூர பயணங்களுக்கான வாய்ப்புகள் கைகூடும்.

சிம்மம்

வாட்டங்கள் அகன்று வருமானம் கூடும் நாள். உறவினர் பகை அகலும். உடல்நலனில் கவனம் தேவை. தொழில் ரீதியாக தெளிவான முடிவெடுப்பீர்கள்.

கன்னி

உறவினர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். வருமோ வராதோ என நினைத்த பணவரவு ஒன்று கைக்கு கிடைக்கலாம். உத்தியோகத்தில் வேலைப் பளு கூடும்.

துலாம்

குடும்பச் சுமை கூடும் நாள். சோம்பல் காரணமாக திட்டமிட்ட காரியம் ஒன்றை மாற்றி அமைக்க நேரிடலாம். கொடுக்கல், வாங்கல்களில் கவனம் தேவை.

விருச்சிகம்

முன்னேற்றம் கூடும் நாள். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படுவீர்கள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும்.

தனுசு

மனக்கசப்புகள் மாறும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிட்டும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் சந்திப்பு முன்னேற்றம் தரும்.

மகரம்

யோகமான நாள். நினைத்தது நிறைவேறும். வருமானம் எதிர்பார்த்தபடியே வந்து சேரும். நீடித்த நோய் அகல மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.

கும்பம்

நம்பிக்கைகள் நடைபெறும் நாள். தொழிலுக்காக எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் இலாகா மாற்றங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும்.

மீனம்

தனவரவு திருப்தி தரும் நாள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். அன்னிய தேசத்திலிருந்து ஆதாயம் தரும் தகவல் வரும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

Tags:    

Similar News