செய்திகள்

கடம்பூர் அருகே மின்வேலியில் சிக்கி யானை பலி

Published On 2016-11-03 15:37 IST   |   Update On 2016-11-03 15:37:00 IST
கடம்பூர் அருகே 10 வயது ஆண் யானை ஒன்று மின்வேலியில் சிக்கி பரிதாபமக இறந்தது.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம், கடம்பூர் வனப்பகுதி கல் கடம்பூரை சேர்ந்தவர் தங்க வேல் (வயது 48). இவரது தோட்டத்தில் வன விலங்குகள் புகாமல் இருக்க மின் வேலி அமைத்திருந்தார்.

வனப்பகுதியில் இருந்து வந்த 10வயது ஆண் யானை ஒன்று இந்த மின்வேலியில் சிக்கியது. இதில் அந்த யானை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் கடம்பூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் அங்கு விரைந்துள்ளனர். கால்நடை டாக்டர்களும் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உள்ளனர்.

Similar News