செய்திகள்

கோவில் முன்பு நடந்து சென்ற முதியவர் சுருண்டு விழுந்து பலி

Published On 2016-11-01 17:55 IST   |   Update On 2016-11-01 17:55:00 IST
கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரர் கோவில் முன்பு முதியவர் சுருண்டு விழுந்து பலியானார்.

ஈரோடு:

கொடுமுடியில் உள்ள மகுடேஸ்வரர் கோவில் முன்பு உள்ள அறுபத்து மூவர் மடம் அருகே ஒரு முதியவர் நடந்து சென்றார்.

அப்போது அவர் திடீர் என்று சுருண்டு விழுந்தார். மல்லாந்த நிலையில் கிடந்த அவர் சிறிது நேரத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் கொடுமுடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதன்பிறகு பிரேத பரிசோதனைக்கு கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு முதியவரின் உடலை அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் இறந்தவரின் பெயர் ஏகாம்பரம் (வயது 82) ஓசூரை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

உடல்நலம் இல்லாமல் இருந்த இவர் சாமி கும்பிட வந்த போது இறந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News