செய்திகள்
வேதாரண்யம் அருகே பெண் மீது தாக்குதல்
வேதாரண்யம் அருகே பெண் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கத்தரிப்புலம் கோவில்குத்தகை பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் ரவிச்சந்திரன். இவர் தனியே குடியிருந்து வருகிறார். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த தருமையன் மகன் மகாதேவன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மகாதேவன் ரவிச்சந்திரன் தாய் பட்டம்மாள் (60) என்பவர் வீட்டிற்கு சென்று அவரை தாக்கி வீட்டிலிருந்த பொருட்களை சேதப்படுத்தி உள்ளார்.
இதில் காயமடைந்த பட்டம்மாள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பட்டம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் பசுபதி வழக்கு பதிவு செய்து தலைமறைவான மகாதேவனை தேடி வருகிறார்.