செய்திகள்
அருப்புக்கோட்டை அருகே இருதரப்பினர் மோதல்: 16 பேர் மீது வழக்கு- 4 பேர் படுகாயம்
அருப்புக்கோட்டை அருகே இருதரப்பினர் மோதிக்கொண்டனர். இதுதொடர்பாக 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பாலையம்பட்டி:
அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முனியாண்டி (வயது40). இவருக்கும் கிழக்கு காலனியை சேர்ந்த காளிங்ராஜ் மகன் வெற்றிவேலுக்கும் (வயது 20) முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று இவர்களுக்கு திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இருதரப்பை சேர்ந்தவர்களும் ஒருவரையொருவர் கம்பு, கல் போன்ற வற்றால் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
இதில் முனியாண்டி, வெற்றிவேல், ரமேஷ் உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்தனர்.
இருதரப்பினர் கொடுத்த புகாரின்பேரில் அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜ், மோதலில் ஈடுபட்ட 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். மோதல் காரணமாக அப்பகுதியில் பதட்டம் நிலவுவதால் போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளது.