செய்திகள்

திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்தல் விதி மீறல்களை தடுக்க பறக்கும் படை அமைப்பு

Published On 2016-10-19 05:39 GMT   |   Update On 2016-10-19 05:39 GMT
திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்தல் விதி மீறல்களை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை:

திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதையொட்டி அத்தொகுதிக்கு உள்பட்ட பல இடங்களில் அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள் தேர்தல் அலுவலர்களால் அழிக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் தொகுதியின் இடைத்தேர்தல் கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் விதிமீறல்களை தடுக்க பறக்கும்படை, நிலை கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

திங்கட்கிழமை இரவில் இருந்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இக்குழுக்கள் பணியாற்றி வருகின்றன. மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் நகர் பகுதியில் அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன.

தொகுதிக்கு உள்பட்ட அனைத்து கிராமங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளால் சுவர் விளம்பரங்கள் அழிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது என்று தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

Similar News