செய்திகள்
தரங்கம்பாடி அருகே மோட்டார் சைக்கிளில் மது பாட்டில்களை கடத்தி வந்த வாலிபர் கைது
தரங்கம்பாடி அருகே மோட்டார் சைக்கிளில் மது பாட்டில்களை கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள திருவிடைக்கழி பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் கார்த்திகேயன்.
இவர் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி தனது மோட்டார் சைக்கிளில் வாட்டர் பாட்டில் கொண்டு வருவது போல் வந்தார். அவர் பொறையாறு சோதனைச்சாவடி வழியாக வந்த போது போலீசார் சந்தேகத்தின் பேரில் வாட்டர் பாட்டில் பார்சலை பிரித்து பார்த்த போது அதில் 450 மது பாட்டில்கள் இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும்.
இதைத்தொடர்ந்து மது பாட்டில்களை கடத்தி வந்த கார்த்திகேயனை பொறையாற இன்ஸ்பெக்டர் முருகவேல் கைது செய்தார். மேலும் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள், கடத்தலில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.