செய்திகள்

ஆசனூர் அருகே ரோட்டில் நடமாடும் யானைகள் கூட்டம்: போக்குவரத்து பாதிப்பு

Published On 2016-10-06 15:21 IST   |   Update On 2016-10-06 15:21:00 IST
ஆசனூர் அருகே ரோட்டில் நடமாடும் யானைகள் கூட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி ஆசனூரில் நூற்றுக் கணக்கான யானைகள் வசித்து வருகிறது. வனப்பகுதியில் போதி மழை இல்லாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் வன விலங்குகள் இரை தேடியும் தண்ணீர் தேடியும் வெளியே நடமாட தொடங்கி உள்ளது.

ஆசனூர் அருகே கர்நாடக மாநில எல்லையையொட்டி உள்ள (தாளவாடி செல்லும் வழி) காரப்பள்ளம் என்ற இடத்தில் கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டம் ரோட்டோரம் நடமாடுகிறது.

சுமார் 7 யானைகள் ரோட்டோரம் உள்ள மரக்கிளை முறித்து ஒடித்து சாப்பிடுகிறது. இதில் சில யானைகள் ரோட்டின் மத்தியிலும் நடமாடுகிறது. யானைகள் ரோட்டில் நடமாடுவதால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த யானைகள் கூட்டம் இரவு மற்றும் பகல் நேரத்திலும் ரோட்டில் சுற்றி திரிவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்றும் யானைகளை பார்க்கும் ஆர்வத்தில் வாகனங்களிலிருந்து யாரும் இறங்க வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.

Similar News