செய்திகள்

அரியலூர் அருகே விபத்தில் பலியான 14 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி

Published On 2016-09-30 16:38 IST   |   Update On 2016-09-30 16:38:00 IST
அரியலூர் அருகே விபத்தில் பலியான 14 பேரின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதியை ஆர்.டி.ஓ. வழங்கினார்.
உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகேயுள்ள கச்சிப் பெருமாள் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமநாதன். இவரது மைத்துனர் அருகில் உள்ள புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவர் கடந்த 15 நாட்களுக்கு முன் இறந்துவிட்டார். அவரது துக்க சடங்கிற்கு ராமநாதன் தனது கிராமத்தைச் சேர்ந்த உறவினர்களை கடந்த 24-ம் தேதி மினி சரக்கு வாகனத்தில் புதுக்குடிக்கு அழைத்து சென்றார். பின்னர் சடங்கு முடிந்தவுடன் அழைத்து சென்ற பெண்கள் 25 பேரை மீண்டும் அதே மினி சரக்கு வாகனத்தில் திரும்ப அனுப்பினார்.

அவர்கள் அனைவரும் வந்து கொண்டிருந்தபோது கச்சிப்பெருமாள் ஊர் எல்லை திருச்சி - சிதம்பரம் நெடுஞ்சாலையில் எதிரே அரியலூரிலிருந்து பெண்ணாடம் நோக்கி சென்ற டேங்கர் லாரியும் சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 16 பேர் பலியாகினர்.

இவர்களில் 14 பேரின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதியை ஆர்.டி.ஓ. தீனாகுமாரி வழங்கினார். மேலும் இருவரின் குடும்பத்திற்கு இன்று நிவாரண நிதி வழங்கப்படும் என்று தெரிவித்தார். அருகில் தாசில்தார் திருமாறன் உடனிருந்தார்.

Similar News