செய்திகள்
மீன்சுருட்டி அருகே தொழிலாளி தற்கொலை
மீன்சுருட்டி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஜெயங்கொண்டம் :
ஜெயங்கொண்டம் அருகே சலுப்பை கிராமம் வடக்கு காலனி தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் ( வயது 50) கூலி தொழிலாளி. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி குணமாக வில்லை.
இதனால் மனமுடைந்த பால்ராஜ் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து விட்டார். இதையடுத்து அவரை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பால்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மீன்சுருட்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராயர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.