செய்திகள்

திருவண்ணாமலை அருகே ஆந்திர பஸ் மீது கல்வீச்சு: மர்ம நபர்கள் 3 பேருக்கு வலைவீச்சு

Published On 2016-09-21 22:36 IST   |   Update On 2016-09-21 22:36:00 IST
திருவண்ணாமலை அருகே ஆந்திர பஸ் மீது கல்வீசியதில் பஸ் கண்ணாடி உடைந்தது. கல்வீசிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருவண்ணாமலை:

ஆந்திர மாநில அரசு பஸ் ஒன்று சித்தூரில் இருந்து திருவண்ணாமலைக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. பஸ்சை சித்தூரை சேர்ந்த டிரைவர் மோகன் (வயது 45) என்பவர் ஓட்டி வந்தார். பஸ்சில் சுமார் 35 பயணிகள் இருந்தனர்.

திருவண்ணாமலை அருகேயுள்ள துர்க்கை நம்மியந்தல் பஸ் நிறுத்தம் அருகே இரவு 8 மணி அளவில் பஸ் வந்த போது மர்மநபர்கள் 3 பேர் திடீரென கல் வீசிவிட்டு தப்பிவிட்டனர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

இது தொடர்பாக திருவண்ணாமலை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் மர்ம நபர்கள் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News