செய்திகள்
பாப்பிரெட்டிப்பட்டியில் அன்னை வேளாங்கண்ணி ஆலய தேர்பவனி திருவிழா
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலய தேர்பவனி திருவிழா நடைபெற்றது. விழாவை சேலம் மறைமாவட்ட முதன்மை ஆயர் ஜான் ஜோசப் கொடியேற்றி தொடங்கி வைத்தார்.
பொம்மிடி:

அதைத்தொடர்ந்து நவநாள் திருப்பலி ஆராதனை நடந்தது. இதில் ஓசூர் பங்குதந்தை சேவியர், தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலி நடத்தினர். அதைத்தொடர்ந்து அன்னை வேளாங்கண்ணி ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதை பாதிரியார் கிறிஸ்டோபர் தொடங்கி வைத்தார்.
பாப்பிரெட்டிப்பட்டியில் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இந்த நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி, பி.பள்ளிப்பட்டி, தென்கரைகோட்டை, பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பங்குதந்தைகள் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.