செய்திகள்

கர்நாடக பாதையில் செல்லாமல் தலமலை வழியாக தாளவாடி செல்லும் தமிழக வாகனங்கள்

Published On 2016-09-15 10:07 IST   |   Update On 2016-09-15 10:07:00 IST
தமிழக வாகனங்கள் திம்பத்திலிருந்து தலமலை வழியாக தமிழக வனப்பகுதியில் சுற்றிக்கொண்டு தாளவாடிக்கு சென்றன. கர்நாடக மாநிலத்தில் அமைதி திரும்பினாலும் கர்நாடக மாநில பகுதி வழியாக செல்ல தயக்கம் காட்டி வருகிறார்கள்.
சத்தியமங்கலம்:

சத்தியமங்கலத்திலிருந்து தாளவாடிக்கு செல்லும் பஸ்களும் வாகனங்களும் சுமார் 5 கி.மீட்டர் மட்டும் கர்நாடக மாநில எல்லை வழியாக செல்ல வேண்டும்.

ஆனால் கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக கர்நாடகாவில் கலவரம் தீ வைப்பு சம்பவம் நடந்ததையொட்டி இந்த வாகனங்கள் கர்நாடக எல்லை வழியாக செல்லவில்லை.

மாறாக திம்பத்திலிருந்து தலமலை வழியாக தமிழக வனப்பகுதியில் சுற்றிக்கொண்டு தாளவாடிக்கு சென்றன.

தற்போது கர்நாடக மாநிலத்தில் அமைதி திரும்பினாலும் கர்நாடக மாநில பகுதி வழியாக செல்ல தயக்கம் காட்டி வருகிறார்கள்.

இதனால் தொடர்ந்து தலமலை வழியாக தமிழக வனப்பகுதியில் சுற்றிக் கொண்டுதான் வாகனங்கள் தாளவாடிக்கு சென்று வருகிறது. மேலும் தமிழக சோதனை சாவடிகளான பண்ணாரி, ஆசனூர் மற்றும் கர்நாடக மாநில எல்லையான புளிஞ்சூர் சோதனை சாவடியிலும் தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்றும் கர்நாடகாவுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.

போக்குவரத்து வழக்கம்போல் தொடங்கப்படாததையொட்டி ஈரோடு வனப்பகுதி ரோடு இன்னும் வெறிச்சோடியே காணப்பட்டது.

Similar News