செய்திகள்
முறிந்து விழுந்த 12 தலைமுறைகளை கண்ட அரசமரம்.

400 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான அரசமரம் முறிந்து விழுந்தது: பொதுமக்கள் வேதனை

Published On 2016-09-14 16:22 IST   |   Update On 2016-09-14 16:22:00 IST
பல தலமுறைகளை கண்ட அரசமரம் முறிந்து விழுந்ததை கண்டு அப்பகுதி மக்கள் மிகவும் வேதனை அடைந்து உள்ளனர்.
நம்பியூர்:

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே கோசணம் ஊராட்சி பொத்தபாளையத்தில் பழமையான ஒரு அரசமரம் இருந்தது.

சுமார் 400 ஆண்டு பழமையான இந்த மரம் அருகில் மாரியம்மன் கோவில் உள்ளது. இதனால் அப்பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மக்கள் அந்த அரசமரத்தை கடவுளாக பாவித்து தரிசனமும் செய்து வந்தனர்.

மேலும் இந்த மரம் அந்த ஊரின் அடையாளமாகவும் 2 ஆயிரம் சதுர அடியில் பொதுமக்களுக்கு நிழலும் கொடுத்து வந்தது. சுமார் 12 தலைமுறை இம்மரம் பார்த்ததாகவும் அப்பகுதி மக்கள் கூறினர்.

இப்படி சிறப்பு மிக்க இந்த அரசமரம் நான்காக பிளந்து நடுவில் பெரிய பொந்து ஏற்பட்டது. இப்போது அந்த மரம் முறிந்து கீழே விழுந்து தனது ஆயுளை முடித்து கொண்டது.

பல தலமுறைகளை கண்ட அந்த அரசமரம் முறிந்து விழுந்ததை கண்டு அப்பகுதி மக்கள் மிகவும் வேதனை அடைந்து உள்ளனர். மேலும் பலர் முறிந்து விழுந்த மரத்தை வருத்தத்துடன் பார்த்து செல்கிறார்கள்.

Similar News