செய்திகள்
விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி மாரியம்மன் கோவிலில் வெள்ளித்தேர் இழுத்து தே.மு.தி.க.வினர் வழிபாடு
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பொன்னமராவதியில் கொன்னையூர் மாரியம்மன் கோவிலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு தே.மு.தி.க. சார்பில் வெள்ளித்தேர் இழுக்கப்பட்டது.
திருமயம்:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பொன்னமராவதியில் கொன்னையூர் மாரியம்மன் கோவிலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு தே.மு.தி.க. சார்பில் வெள்ளித்தேர் இழுக்கப்பட்டது.
இதில் மாவட்ட செயலாளர் ராமசாமி, மாவட்ட அவைத் தலைவர் சீனிவாச மூர்த்தி, புதுக்கோட்டை நகர செயலாளர் சுப்பிரமணியன். ஒன்றிய செயலாளர் சின்னக் கருப்பன், ஒன்றிய பொருளாளர் மோகன், ஒன்றிய துணை செயலாளர் அன்புச்செல்வன், நகர செயலாளர் செல்வகுமார் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.