திருமயம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருமயம்:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நமணசமுத்திரத்தில் விலைவாசி உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் உயர்ந்து வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் மருந்து பாதுகாப்புத் துறையில் 100 சதவீதம் அன்னிய முதலீட்டை விலக்கி கொள்ள வேண்டும் பசுமாட்டின் பெயரில் தலித் மக்களை ஒடுக்கும் சக்திகளை கட்டுப்படுத்தி ஒடுக்கப்பட்டவர்களை பாதுகாக்க வேண்டும். கல்வி காவிமயம் மற்றும் சமஸ்கிருத திணிப்பை கைவிடவேண்டும் மாநிலக்கல்விக் கொள்கையில் தலையீடு செய்வதை நிறுத்த வேண்டும்.
பாரத ஸ்டேட் வங்கியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்விகடனை வசூல் செய்யும் உரிமத்தை தனியாரிடம் வழங்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும் பொதுத்துறை நிறுவனங்களை அன்னிய நாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதை கண்டித்தும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்க்கு திருமயம் ஒன்றிய செயலாளர் சுப.தங்கமணி தலைமை வகித்தார். அரிமளம் ஒன்றிய செயலாளர் பெர மையா. ஒன்றிய துணை செயலாளர்கள் அர்சுணன், சின்னக்கருப்பன், ராமநாதன், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றிய செயலாளர் ரெங்கையா மாவட்ட நிர்வாக்குழு உறுப்பினர் சிங்கமுத்து, காடப்பன், மெய்யப்பன், சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.