செய்திகள்

கடம்பூர் அருகே வீட்டில் 15 கிலோ கஞ்சா பதுக்கல்: போலீசார் பறிமுதல்

Published On 2016-08-12 16:31 IST   |   Update On 2016-08-12 16:32:00 IST
கடம்பூர் அருகே வீட்டில் 15 கிலோ கஞ்சா பதுக்கியவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

சத்தியமங்கலம்:

கடம்பூர் அருகே உள்ள கூட்டாதொட்டி என்ற இடத்தை சேர்ந்தவர் ராஜன் (வயது 48). இவரது வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையொட்டி பங்களா புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

அவர்கள் ராஜனின் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை போட்டனர்.

அப்போது அங்கு பெரிய அளவிலான வெள்ளை நிற பாலிதீன் சாக்கு பை இருந்தது. இந்த பையை பிரித்து போலீசார் சோதனை போட்டனர்.

அப்போது அந்த பையில் ஏராளமான கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதில் இருந்த 15 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதையொட்டி வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தாக ராஜனை போலீசார் கைது செய்தனர்.

இந்த கஞ்சா அவருக்கு எப்படி கிடைத்தது? இதை அவர் யாருக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தார். இதற்கு முன் ராஜன் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தாரா? என்பது பற்றி அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதன்பிறகு கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜன் பிறகு 15 நாள் காவலில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

Similar News