செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் நீடித்து இந்திய கம்யூ., போட்டி

Published On 2016-08-08 12:03 IST   |   Update On 2016-08-08 12:03:00 IST
உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் நீடித்து இந்திய கம்யூனிஸ்டு போட்டியிட மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஈரோடு:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஈரோடு மாவட்ட குழு கூட்டம் கட்சியின் கட்டுப்பாட்டுக் குழு தலைவர் வி.பி.குணசேகரன் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் மற்றும் துணை செயலாளர் கே.சுப்பராயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கட்சி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் உள்ளாட்சி தேர்தல் ஆகியவை பற்றி பேசினார்கள்.

கூட்டத்தில் வரும் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் இருந்து போட்டியிடுவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் கூட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகள் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்க சாவடி உள்பட அனைத்து சுங்க சாவடிகளையும் ரத்து செய்து அகற்ற வேண்டும். அத்தியாவசிய பொருட்களில் விலை உயர்வை கண்டித்து வரும் 17-ந் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கொடுமுடி, அனுமன்பள்ளி, சென்னி மலை, பெருந்துறை, பவானி, அந்தியூர், பர்கூர், கோபி, நம்பியூர், சத்தியமங்கலம், புளியம்பட்டி, பவானிசாகர், தாளவாடி, கடம்பூர் ஆகிய 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

மேலும் கூட்டத்தில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ப.பா.மோகன், துளசிமணி, மாதேஸ்வரன், பிரபாகரன், பாலதண்டாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News