செய்திகள்

லாரியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

Published On 2016-08-07 18:07 IST   |   Update On 2016-08-07 22:44:00 IST
ஈரோடு அருகே லாரியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு வீரப்பன் சத்திரம் ஏ.பி.டி ரோட்டை சேர்ந்தவர் துரைசாமி (வயது 65). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வெட்டுக்காட்டு வலசில் உள்ள ஒரு டையிங் பட்டறை அருகே ஒரு லாரியில்இருந்த பீஸ் துணிகளை இறக்கி கொண்டு இருந்தார்.

அப்போது லாரியின் மேல் நின்று கொண்டு இருந்த துரைசாமி திடீர் என்று நிலைமாறி கீழேவிழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவர் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றார். பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட துரைசாமி அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News