செய்திகள்
பொன்னமராவதியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
பொன்னமராவதியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
பொன்னமராவதி:
பொன்னமராவதியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளரும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவருமான வைரமுத்து, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு வரும் உள்ளாட்சித்தேர்தலில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பேசினார்கள்.
இதில் முன்னாள் அமைச்சர் ராதகிருஷ்ணன், மாவட்ட சேர்மன் ராமையா, ஒன்றியச் செயலாளர் அழகுசுப்பையா, நகரச் செயலாளர் ராஜேந்திரன், ஒன்றியக் குழுதுணைத் தலைவர் மீனாள்முருகப்பன், புதுகை நகராட்சித் தலைவர் ராஜசேகரன், பேரூராட்சித் தலைவர் ராஜாஅம்பலகாரர், நிர்வாகிகள் காசிகண்ணப்பன், பழனிச்சாமி, டேவிட் பழனிச்சாமி, மலைச்சாமி, மாரிமுத்து, செல்வராஜ், பழனியப்பன். சிதம்பம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.