செய்திகள்

காராவயல் கோவிலில் திருவிளக்கு பூஜை

Published On 2016-07-23 20:30 IST   |   Update On 2016-07-23 20:30:00 IST
காராவயல் கோவிலில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குத்து விளக்குகளுக்கு பூஜை செய்து அம்பாளை வழிபட்டனர்.

அறந்தாங்கி:

அறந்தாங்கி அருகே காராவயல் உச்சினி மகா காளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குத்து விளக்குகளுக்கு பூஜை செய்து அம்பாளை வழிபட்டனர்.

அறந்தாங்கி அருகே காராவயல் உச்சினி மகா காளியம்மன், வீரபத்திர சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் ஆடிமாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்று திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 11–ஆம் ஆண்டாக திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்குகளுக்கு, சிவாச்சாரியார் வேதமந்திரங்கள் கூற பெண்கள் அதை திரும்பக்கூறி, குத்து விளக்குகளுக்கு பூஜைகள் செய்து, மழை வளம் பெருகவும், விவசாயம் செழிக்கவும், வீட்டில் அனைவரும் நோய் நொடியின்றி மகிழ்ச்சியாக வாழவும், குழந்தைகள் நல்ல முறையில் படிக்கவும், உலகம் அமைதி பெறவும் வேண்டி பூஜைகள் செய்தனர்.

இந்த பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். திருவிளக்கு பூஜையை முன்னிட்டு உச்சினி மகாகாளியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இளந்தென்றல் இளைஞர் மன்றத்தினர் மற்றும் காராவயல் கிராமத்தினர் செய்திருந்தனர்.

Similar News