செய்திகள்

செம்பனார்கோவில் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது

Published On 2016-07-23 15:57 IST   |   Update On 2016-07-23 15:57:00 IST
செம்பனார்கோவில் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தரங்கம்பாடி:

நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே உள்ள மருதம்பள்ளம் ஊராட்சியில் சின்னமேடு வடக்குதெருவை சேர்ந்த வைத்திலிங்கம் மகன் திருமுருகன் (வயது 23) மீனவர்.

இவர் அதே பகுதியில் வசிக்கும் 2 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லை செய்துள்ளார். இதுபற்றி அப்பகுதி மக்கள் பொறையார் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முருகவேல் வழக்குப்பதிவு செய்து திருமுருகனை கைது செய்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News