செய்திகள்
நாகை அருகே பாம்பு கடித்து பெண் சாவு
நாகை அருகே புதரில் மறைந்திருந்த பாம்பு கடித்து பெண் பலியானார்.
நாகப்பட்டினம்:
நாகை அருகே உள்ள மஞ்சக்கொல்லையை சேர்ந்தவர் ருக்மணி (வயது 70) இவர் வீட்டின் பின்புறம் சென்றபோது புதரில் மறைந்திருந்த பாம்பு கடித்தது. அவரை மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து நாகை சப்–இன்ஸ்பெக்டர் இலங்கேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.