செய்திகள்

தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு தொகை

Published On 2016-07-19 18:04 IST   |   Update On 2016-07-19 18:04:00 IST
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2015-16–ம் கல்வி ஆண்டில் 10 மற்றும் 12–ம் வகுப்பில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் பழனிசாமி பரிசுகள் வழங்கினார்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருக்கடையூர் பி.பி.என் மின் உற்பத்தி நிறுவனம் வருடந்தோறும் 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பெறும் மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் பரிசுகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில் 2016–ம் ஆண்டு 12–ம் வகுப்புதேர்வில் நாகை மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற சீர்காழி பெஸ்ட் மெட்ரிக். பள்ளி மாணவி நித்யஸ்ரீக்கு ரூ.15,000–ம், 2–ம் இடம்பெற்ற ஏனங்குடி அல்காதிரியா மெட்ரிக் பள்ளி மாணவி ஹசானாவுக்கு ரூ.10,000–ம், 3–ம் இடம் பெற்ற மயிலாடுதுறை ஏ.ஆர்.சி காமாட்சி மெட்ரிக் பள்ளி மாணவி துளசிக்கு ரூ.6,000 பரிசுத் தொகைக்கான காசோலையும்.

10–ம் வகுப்புதேர்வில் நாகை மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் பள்ளி மாணவி ஆயிஷாசித்திகாவுக்கு ரூ.15,000–ம், 2–ம் இடம் பெற்ற மாணவி மனோரஞ்சனி (நஸ்ருல் முஸ்லிமின் மெட்ரிக் பள்ளி, நீடுர்), தினேஷ்ராஜ்(விவேகானந்தா மெட்ரிக் பள்ளி, சீர்காழி), மிருதுரோஷினி (ஜெய்ஹிந்த் மெட்ரிக் பள்ளி, தேரெழுந்தூர்) ஆகியோருக்கு தலா ரூ.10,000–ம், 3–ம் இடம் பெற்ற மாணவி லாவண்யா (காயிதே மில்லத் மெட்ரிக் பள்ளி, தோப்புத்துறை) சங்கவி (காயிதே மில்லத் மெட்ரிக் பள்ளி, தோப்புத்துறை), விக்ரம் (டி.பி.டி.ஆர் நே‌ஷனல் மெட்ரிக் பள்ளி, மயிலாடுதுறை), வைஷ்ணவி (குருஞானசம்பந்தர் பள்ளி, மயிலாடுதுறை), பத்ரிநாத் (விவேகானந்தா மெட்ரிக் பள்ளி, சீர்காழி), ஐஸ்வர்யா (நடராஜன் தமயந்தி பள்ளி, நாகை) ஆகியோருக்கு தலா ரூ.6,000 பரிசுத் தொகைகாசோலை வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் மட்டுமல்லாமல், மாநில அளவில் சிறப்பிடம் பெற்று தம் பெற்றோருக்கும், பள்ளிக்கும் பெருமை தேடித்தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News