செய்திகள்

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வியாபாரி பலி

Published On 2016-07-09 22:40 IST   |   Update On 2016-07-09 22:41:00 IST
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
மாமல்லபுரம்:

மாமல்லபுரம் டி.கே.எம். சாலையில் வசித்து வந்தவர் லோகநாதன் என்ற காமராஜ்(வயது 56). இவர், திருக்கழுக்குன்றம் சாலையில் காய்கறி மொத்த விற்பனை கடை வைத்து உள்ளார்.

இவர், நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது சென்னையில் இருந்து திருக்கழுக்குன்றத்துக்கு மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று லோகநாதன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், மின் கம்பத்தில் தலை மோதியதில் படுகாயம் அடைந்தார்.

அருகில் இருந்தவர்கள் லோகநாதனை மீட்டு செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், லோகநாதன் வரும் வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Similar News