செய்திகள்

மாமல்லபுரம் அருகே தாறுமாறாக ஓடிய கார் மோதி ஒருவர் பலி

Published On 2016-07-08 12:57 IST   |   Update On 2016-07-08 12:58:00 IST
மாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற லோகநாதன் என்பவர் கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மாமல்லபுரம்:

மாமல்லபுரம் டி.கே.எஸ். சாலையில் காய்கறி கடை நடத்தி வருபவர் லோகநாதன் (வயது 56). நேற்று இரவு மாலமல்லபுரம் சிற்ப கல்லூரி எதிரே ஓட்டலில் சாப்பிட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது சென்னையில் இருந்து திருக்கழுக்குன்றம் நோக்கி சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து லோகநாதன் மீது மோதியது. மேலும் கார் இரண்டு முறை சாலையில் சுற்றி அருகில் உள்ள மின் கம்பத்தில் மோதி நின்றது.

இதில் லோகநாதன் சம்பவ இடத்திலேயே பலியானார். மோதிய வேகத்தில் காரில் இருந்த பாதுகாப்பு பலூன் விரிந்ததால் அதிலிருந்த டிரைவர் உள்பட 3 பேர் உயிர் தப்பினர்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வர் மோகன் (33). இன்று காலை அவர் நண்பர் லோகேஷ், மகேசுடன் ஒரே மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் நோக்கி சென்றார். பூண்டி பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிரே வந்த ஜீப் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோகன் பலியானார். பலத்த காயம் அடைந்த லோகேஷ், மகேசுக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Similar News