செய்திகள்
ஜெயங்கொண்டம் அருகே தம்பியை கொலை செய்த சப்–இன்ஸ்பெக்டர் மகன் கைது
ஜெயங்கொண்டம் அருகே தம்பியை கொலை செய்த குற்றத்திற்காக அண்ணணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிலம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம், இவர் விழுப்புரம் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில்கடந்த 18-ம் தேதி இவரின் 2-வது மகன் செந்தமிழ்ச்செல்வன் மற்றும் நான்காவது மகன் செல்வமுருகன் இருவரும் குடிபோதையில் வீட்டில் சண்டைபோட்டுள்ளனர்.
இதில் கோபமடைந்த செந்தமிழ்ச் செல்வன் தனது தம்பியை பலமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த செந்தமிழ்ச் செல்வன் விஷம் குடித்துவிட்டு ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பினார்.
தம்பியை கொலை செய்த குற்றத்திற்காக ஆண்டிமடம் போலீசார் செந்தமிழ்ச் செல்வனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.