செய்திகள்

கடலூரில் வாகன சோதனையின் போது பழைய குற்றவாளிகள் 15 பேர் சிக்கினர்

Published On 2016-06-07 17:45 IST   |   Update On 2016-06-07 17:45:00 IST
கடலூரில் வாகன சோதனையின் போது ஏற்கனவே குற்ற வழக்குகளில் தேடப்படும் பழைய குற்றவாளிகள் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வாகன சோதனை நடத்தினர்.

இதில் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், வாகன புத்தகம் இல்லாமை, குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் போன்ற பல்வேறு விதிமுறைகளை மீறியதாக 835 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக மட்டும் 40 பேர் சிக்கினர். இதேபோல் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 80 பேரை போலீசார் கைது செய்தனர்.

பழைய குற்றவாளிகள் 15 பேரும் கைது செய்யப்பட்டனர். பிடிவாரண்டு குற்றவாளிகள் 15 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Similar News