செய்திகள்
நெய்வேலியில் என்.எல்.சி. பள்ளி காவலாளி மர்ம சாவு
நெய்வேலியில் என்.எல்.சி.பள்ளி காவலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெய்வேலி:
நெய்வேலியை அடுத்த புதுநகரில் என்.எல்.சி. பெண்கள் மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் காவலாளியாக மந்தாரகுப்பத்தை சேர்ந்த ரங்கராஜன்(வயது 70) வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு அவர் பணியில் இருந்தார். இன்று காலை பள்ளி வளாகத்தில் இறந்து கிடந்தார்.
இதனை கண்ட அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் நெய்வேலி டவுன்ஷிப் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி என்.எல்.சி. பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவலாளி ரங்கராஜன் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.