செய்திகள்
கடலூரில் பைபர் படகு, விசைப்படகுகள் எவ்வளவு உள்ளது என்று மீன் வளத்துறை அதிகாரிகள் ஆய்வு
ஆண்டுக்கு ஒரு முறை மீன்வளத்துறை சார்பில் பைபர் படகு, விசைப்படகுகள் எவ்வளவு உள்ளது என்று ஆய்வு செய்யப்படும். அதன்படி மீன்வளத்துறை அதிகாரிகள் கடலூர் மாவட்டத்தில் இன்று ஆய்வு செய்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் 30–க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் உள்ள மீனவர்கள் பைபர் படகு, விசைப்படகுகள் மூலம் தினந்தோறும் மீன்பிடித்து வருகின்றனர்.
இந்தநிலையில் ஆண்டுக்கு ஒரு முறை மீன்வளத்துறை சார்பில் பைபர் படகு, விசைப்படகுகள் எவ்வளவு உள்ளது என்று ஆய்வு செய்யப்படும். அதன்படி மீன்வளத்துறை அதிகாரிகள் கடலூர் மாவட்டத்தில் இன்று ஆய்வு செய்தனர்.
மேலும் அவர்களுக்கு டீசல் மானியமாக வழங்குவது குறித்தும், படகு வைத்திருப்பவர்கள் இன்சூரன்ஸ் முறைப்படி செலுத்தி உள்ளார்களா? என்றும் ஆய்வு செய்தனர். ஒவ்வொரு மீனவ கிராமத்திற்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 6 பேர் கொண்ட குழு நேரில் சென்று ஆய்வு செய்தது.
இதனால் கடலூர் மாவட்டத்தில் மீனவர்கள் யாரும் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை. கடலூர் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.