செய்திகள்
ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்தில் உயிரிழந்த வீரர் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது
அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்தில் உயிரிழந்த வீரர் ஹெவில்தார் ராமசாமி உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. ராணுவ மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே உள்ள பாலகுரி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 42). இவர் அருணாசலம் பிரதேசம் ராணுவத்தில் ஹெவில்தாராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 19–ந்தேதி அன்று இந்தியா– சீனா எல்லைப் பகுதியான தடாங் என்ற இடத்தில் ரோந்து பணியில் ஈடுபடுவதற்காக அதிகாரிகளுடன் ஹெவில்தார் ராமசாமி ராணுவ வாகனத்தில் ராமசாமி சென்றார். அந்த ராணுவ வாகனத்தை ஹெவில்தார் ராமசாமி ஓட்டினார்.
தடாங் என்ற இடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ராணுவ வாகனம் திடீரென அங்கிருந்த பள்ளத்தில் இறங்கியது. இதில் ராணுவ வாகனம் தலைக்கீழாக கவிந்ததில் ஹெவில்தார் ராமசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்தில் பலியான இவருக்கு சுஜாதா என்ற மனைவியும், சுதா என்ற மகளும், ரோகித், தரனிஷ் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இந்த விபத்து சம்பவம் குறித்து அவரது குடும்பத்தாருக்கு ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊரான கிருஷ்ணகிரிக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஹெவில்தார் ராமசாமி உடல் விமானத்தில் பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கிருந்து ராணுவ வாகனத்தில் ராமசாமி உடல் சொந்த ஊரான கிருஷ்ணகிரி அருகே உள்ள பாலகுரி பகுதிக்கு இன்று காலையில் கொண்டு வரப்பட்டது.
அப்போது அவரது வீட்டின் முன்பு ஊர் மக்கள் ஓன்று திரண்டு, கூடி நின்று கொண்டிருந்தனர். ஹெவில்தார் ராமசாமி உடல் வீட்டின் முன்பு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலை பார்த்து மனைவி, மகள், மகன்கள் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். மேலும், கிராம மக்கள் முழுவதும் திரளாக வந்து ராமசாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கதிரவன் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு ஆகியோர் ராணுவ வீரர் ராமசாமி உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனர்.
இதையடுத்து, ராணுவ மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
ராணுவ வீரர் பலியான சம்பவத்தால் அந்த கிராமம் முழுவதும் சோகமாக காணப்படுகிறது.