செய்திகள்

கேளம்பாக்கத்தில் 226 மி.மீ. மழை கொட்டி தீர்த்தது

Published On 2016-05-18 06:05 GMT   |   Update On 2016-05-18 06:05 GMT
காஞ்சீபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக கேளம்பாக்கத்தில் 226 மீ.மீட்டர் மழை பெய்துள்ளது.
திருவள்ளூர்:

சென்னை அருகே வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக செய்து உள்ளது. மேலும் தயார் நிலையில் மருத்துவ குழுக்கள் மற்றும் மீட்பு குழுவினர் உள்ளனர்.

மழை குறித்த பாதிப்புகள் ஏதேனும் இருந்தால் பொதுமக்கள் உடனடியாக 044- 27237424, 27237425, 27237107, 27426492, காவல் கட்டுப்பாட்டு அறை எண்: 044-27222000 ஆகிய தொலைபேசி எண்களில் தகவல்களை தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக கேளம்பாக்கத்தில் 226 மீ.மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் பிற பகுதிகளில் பெய்துள்ள மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

காஞ்சீபுரம் - 112.4

செங்கல்பட்டு - 45

மதுராந்தகம் - 59

ஸ்ரீபெரும்புதூர் - 77.5

தாம்பரம் - 90

திருக்கழுக்குன்றம் - 95.6

மகாபலிபுரம் -144.4

கேளம்பாக்கம் - 226

உத்திரமேரூர் 15

செய்யூர் - 92.5

திருவள்ளூரில் நேற்று இரவும் நீடித்த மழை விடிய விடிய கொட்டியது.

திருவள்ளூர் பஸ் நிலையம், பஜார் வீதி, நேதாஜி சாலை, ஜெ.என்.சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் முழங்கால் அளவு மழை நீர் தேங்கியது. காக்களூர் ஊராட்சிக்கு உட்பட்ட பூங்கா நகர் பகுதியில் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டனர்.

கடம்பத்தூரை அடுத்த கசவநல்லாத்தூரில் புளிய மரம் விழுந்ததால் திருவள்ளூர் பேரம்பாக்கம் சாலையில் 1மணி நேரம் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டது. திருவள்ளூர் பஜார் வீதியில் மின் வயர் அறுந்து விழுந்ததில் மாடும் பலியானது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக பொன்னேரியில் 148 மி.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பொன்னேரி - 148

செம்பரம்பாக்கம் - 122

சோழவரம் - 114

திருவள்ளூர் - 99

பூண்டி - 89

செங்குன்றம் - 88

அம்பத்தூர் - 86

தாமரைப்பாக்கம் - 86

பூந்தமல்லி - 80

திருவாலங்காடு - 59

பள்ளிப்பட்டு - 43

ஆர்.கே.பட்டு - 41

திருத்தணி - 29

ஊத்துக்கோட்டை - 22

கும்மிடிப்பூண்டி - 21

திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பாதிப்பு குறித்து பொதுமக்கள் 044-27661200, 27667272, 27662222 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்து உள்ளார்.

அரக்கோணத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவை சேர்ந்த 39 பேர் ஆரம்பாக்கம், பழவேற்காடு பகுதிக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

மேலும் வெள்ள நிவாரண காவல்துறை தொழில்நுட்ப சேவை ஐ.ஜி. சாரங்கன் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிக்கு சென்று முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

Similar News