செய்திகள்
தேர்தல் அறிக்கையில் இலவச அறிவிப்புகள்: தேர்தல் ஆணையத்திடம் திமுக, அதிமுக விளக்கம் அளித்தது
தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் அறிவித்துள்ளது தொடர்பான புகார் குறித்து திமுக, அதிமுக தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை:
அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் 100 யூனிட் வரை இலவச மின்சாரம், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா கைப்பேசி உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
இதேபோல திமுகவின் தேர்தல் அறிக்கையில் மாணவர்களின் கல்விக் கடன், விவசாயிகளின் கூட்டுறவுக் கடன் ரத்து உள்ளிட்ட பல அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
இந்த இலவச அறிவிப்புகள் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் விளக்கம் அளிக்குமாறு திமுக, அதிமுக கட்சிகளுக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் இந்தக் கட்சிகள் அறிவித்துள்ள இலவச திட்டங்களுக்கு எங்கிருந்து நிதி பெறப்படும் என விளக்கம் தர வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது. இந்த விளக்கத்தை இன்று மாலை 5 மணிக்குள் தர வேண்டும் என இரண்டு கட்சிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் அறிவித்துள்ளது தொடர்பான புகார் குறித்து திமுக, அதிமுக கட்சிகள் இன்று மாலை 5 மணியளவில் இ-மெயில் மூலமாக தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் அளித்துள்ளன.