செய்திகள்

அ.தி.மு.க. ஆட்சியில் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகமே சிதைந்து கிடக்கிறது: தி.மு.க. வேட்பாளர் கீதா ஜீவன் பேச்சு

Published On 2016-05-07 16:58 IST   |   Update On 2016-05-07 16:58:00 IST
தூத்துக்குடி தி.மு.க. வேட்பாளர் கீதா ஜீவன் 31, 33 வார்டு பகுதி கணேசபுரம், ஜார்ஜ் ரோடு, பாத்திமா நகர், கீதா ஜீவன் நகர், டி.ஆர்.புரம், தாமஸ் நகர், காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி தி.மு.க. வேட்பாளர் கீதா ஜீவன் 31, 33 வார்டு பகுதி கணேசபுரம், ஜார்ஜ் ரோடு, பாத்திமா நகர், கீதா ஜீவன் நகர், டி.ஆர்.புரம், தாமஸ் நகர், காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில்   பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சியில் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகமே சிதைந்து கிடக்கிறது. கழிவு நீர் செல்ல முடியாமல் வீதிகளில் தேங்கி உள்ளது. மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் தெரு சாலைகள் உள்ளன. நகர் முழுவதும் குப்பைகள் நிறைந்துள்ளன. மாதத்திற்கு 2 முறைதான் குடிநீர் வருகிறது.

இதனால் தூத்துக்குடி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மக்கள் சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை மாற, மக்கள் விரும்பும் மாற்றம் ஏற்பட உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தில் தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவரும், மாநகராட்சி மண்டல தலைவருமான செல்வராஜ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் ரமேஷ், வட்ட செயலாளர் அந்தோணி ஸ்டேன்லி, ஏசுவடியான், மாவட்ட பிரதிநிதி கதிரேசன், போக்குவரத்து தொழிற்சங்க முருகன், கண்ணப்பன், மரியதாஸ், மாலைசூடி அற்புதராஜ், காங்கிரஸ் சிவாஜி பேரவை இக்னேசியஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News