செய்திகள்
கொட்டாம்பட்டி அருகே ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுக்க முயன்ற 2 பேர் கைது
கொட்டாம்பட்டி அருகே ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுக்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் தொகுதி அ.தி.முக. வேட்பாளர் கொட்டாம்பட்டி, சொக்கலிங்கபுரம் மணல்மேட்டுப்பட்டி, ஆலம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஆலம்பட்டி பகுதியில் அவர் வாக்கு சேகரித்தபோது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தனர். அப்போது அவர்களுக்கு 2 பேர் பணம் கொடுக்க முயன்றனர்.
இதனை தொடர்ந்து அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தேர்தல் அலுவலர் திருஞானம், பறக்கும்படை சப்–இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் தலைமையிலான குழுவினர் பணம் கொடுக்க முயன்ற 2 பேரையும் கையும், களவுமாக பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் மேலூர் சொக்கம்பட்டியை சேர்ந்த இளங்கோ (வயது 50), கொட்டாம்பட்டி பள்ளப்பட்டியைச் சேர்ந்த அசரப்கான் (30) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரத்து 980–ஐ பறிமுதல் செய்து அவர்களை கொட்டாம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை கைது செய்தனர்.