உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

திருமண ஏக்கத்தில் 2 வாலிபர்கள் தற்கொலை

Published On 2022-08-06 12:14 IST   |   Update On 2022-08-06 12:14:00 IST
  • தேனி அருகே திருமண ஏக்கத்தில் 2 வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
  • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கம்பம்:

தேனி மாவட்டம் கம்பம் 29-வது வார்டு பகுதிைய சேர்ந்த சீனிவாசன் மகன் அருண்குமார்(32). எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார்.

இவரது நண்பர்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்துவிட்ட நிலையில் பல இடங்களில் பெண் பார்த்தும் திருமணம் நடக்கவில்லை. இதனால் சம்பவத்தன்று தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் தேனி மாவட்டம் சுருளிபட்டியை சேர்ந்த சேகர் மகன் பெருமாள்(29). தந்தை இறந்துவிட்டதால் தனது தாயுடன் திருப்பூரில் வேலைபார்த்து வந்தார். பல வருடங்களாக திருமணத்திற்காக பெண் பார்த்தும் கைகூடவில்லை.

இதனால் மனவேதனையில் இருந்த பெருமாள் பூச்சிமருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News