உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே ரேஷன் அரிசி- துவரம் பருப்பு கடத்திய 2 பேர் கைது:மினி லாரி- மோட்டார் சைக்கிள் பறிமுதல்

Published On 2023-07-04 09:14 GMT   |   Update On 2023-07-04 09:14 GMT
  • மந்திபாளையம் கிராமத்தில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
  • 2 மினி லாரி, 2 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கடலூர்:

பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா, புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் புதுப்பேட்டை மந்திபாளையம் பகுதியில் இரவு ரோந்து பணியில் தீவிரமா கஈடுபட்டிருந்தனர். அப்போது பண்ருட்டி அடுத்த மந்திபாளையம் கிராமத்தில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் மோட்டார் சைக்கிளில் ரேஷன் அரிசி எடுத்துச்செல்வது தெரிய வந்தது.இதனைத் தொடர்ந்து அவரிடம் துருவித்துருவி விசாரித்தனர். விசாரணையில் அவர் வேலூரை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (வயது 45), என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த பழனியும் (55) கைது செய்யப்பட்டார். 2 பேரும் வேலூரை சேர்ந்தவர் ஆவார்.

இவர்கள் ரேஷன் அரிசி, துவரம் பருப்பு ஆகியவை கேரளாவுக்கு அனுப்பும் கும்பலை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கடத்தல் ரேஷன் அரிசி மூட்டைகளுடன் அருகில் சாலையோரத்தில் இருட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 மினி லாரி, 2 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர். கைதான 2 பேரும் மினி லாரியில் பிளாஸ்டிக் பொருட்களை ஏற்றி அதற்குள் ரேஷன் அரிசி, பருப்பு மூட்டைகளை கடத்தி சென்றது தெரிய வந்தது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News