உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்


சிவகிரி அருகே வனத்துறையினரால் தேடப்பட்டு வந்த 2 பேர் கைது

Published On 2023-01-28 12:54 IST   |   Update On 2023-01-28 12:54:00 IST
  • சிவகிரி வனச்சரக அலுவலர் மவுனிகா தலைமையில், வனவர் அசோக்குமார் ஆகியோர் கொண்ட தனிக்குழுவினர் சிவகிரி உள்ளார் கிராமத்தில் மேற்கே உள்ள முருகன் என்பவருக்கு சொந்தமான தோப்பில் சோதனை செய்தனர்.
  • மாவட்ட வன அலுவலர் உத்தரவுப்படி கைது செய்து வனஉயிரின குற்ற வழக்கு பதிவு செய்து கடந்த 17 -ந்தேதியன்று தென்காசி கிளைச்சிறையில் அடைத்தனர்.

சிவகிரி:

சிவகிரி வனச்சரக அலுவலர் மவுனிகா தலைமை யில், சிவகிரி தெற்குப்பிரிவு வனவர் அஜித்குமார், வடக்குப் பிரிவு வனவர் அசோக்குமார் ஆகியோர் கொண்ட தனிக்குழுவினர் சிவகிரி உள்ளார் கிராமத்தில் மேற்கே உள்ள முருகன் என்பவருக்கு சொந்தமான தோப்பில் சோதனை செய்தனர்.

அப்போது சிவகிரி தாலுகா உள்ளார் கிராமத்தை சேர்ந்த பொன்னுத்துரை (வயது39), சுப்பிரமணிய புரம் கிராமத்தை சேர்ந்த அருணாச்சலம் (39), கனிராஜ் (25), விக்னேஷ் (27), அசோக்குமார் (20) ஆகியோர் கடமான் மற்றும் புள்ளிமானின் இறைச்சியுடன் இருந்தனர்.

அவர்களை மாவட்ட வன அலுவலர் உத்தரவுப்படி கைது செய்து வனஉயிரின குற்ற வழக்கு பதிவு செய்து கடந்த 17 -ந்தேதியன்று தென்காசி கிளைச்சிறையில் அடைத்தனர்.

அதனை தொடர்ந்து தப்பியோடிய குற்றவாளி களை பிடிக்க சிவகிரி வனச்சரக அலுவலர் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில் நேற்று ராஜபாளையம் தாலுகா சுந்தரராஜபுரத்தை சேர்ந்த பொன்ராஜ் என்ற மன்னார் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த சதீஸ்குமார் ஆகிய முக்கிய குற்றவாளிகள் 2 பேரை கைது செய்தனர்.

Tags:    

Similar News