திருட்டுத்தனமாக மது விற்ற 2 பேர் கைது
- 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட இளவழகனார் தெருவில் திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று பார்த்த போது அங்கு திருட்டுத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்து கொண்டிருந்த ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பிரபு (வயது 34) என்பவரை போலீசார் கைது செய்து 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதே போல ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு பெட்டி கடையில் திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்த சென்னையை சேர்ந்த சிவானந்தம் (வயது 31), என்பவரை போலீசார் கைது செய்து 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.